ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிறும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் தொடங்கி நல்லமுறையில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6, 7 மற்றும் 8ஆம் வகுப்ப வரையிலான மாணவ மாணவிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு சென்ற செப்டம்பர் 22ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பாராட்டி நன்றி தெரிவித்தோம் இத்திட்டத்தை கண்காணிக்க சுயற்சி முறையில் ஆசிரியர் ஒருவர் காலை 8.39 மணிக்குள்ளாக வருகைத்தந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு மாணவர்வருகைக்கு ஏற்ப காலை உணவை தான் சாப்பிட்டு சரி பார்த்து பின்பு மாணவர்களுக்கு கவனத்துடன் பரிமாறப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டம் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர் ஒருவரை ( nodal teacher ) பள்ளி அளவில் கண்காணிப்பு ஆசிரியராக நிமிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மதுப்புமிகு ந.லதா அவர்கள் சுற்றறிக்கை அனுப்பி ( Nodal teacher ) கண்காணிப்பு ஆசிரியரை உடனே நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே மாணவர்கள் தான் படிக்கின்ற பாடத்தை மட்டும் போதித்தால் போதாது வெவ்வேறு தனி திறனில் மேம்பட வேண்டும் என்ற முனைப்போடு தமிழ் மன்றம், இலக்கிய மன்றம் , ஆங்கில மன்றம் , கணிதம் , அறிவியல் , வினாடி வினா போட்டி , மகிழ் முற்றும் உள்ளிட்ட மன்றங்கள் மூலமாக மாணவர்கள் பொது அறிவில் சிறந்தவரகளாக திகழவேண்டும் என்றும் அதேபோன்று சாரணர் , என்.சி.சி, என்.எஸ்.எஸ் போன்ற திட்டங்களால் நாட்டு நலப் பணிகளில் பங்கெடுத்து மாணவர்கள் தன் ஆர்வத்துடன் செயல் பட்டு பொது நலனில சிறந்து செயலாற்ற வேண்டும் என்று இத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது ஒவ்வொரு திட்டத்திற்கு ஒரு பொறுப்பாசியர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை கண்காணிக்க ஒரு ஆசிரியரை தனியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்திருப்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் வருத்தமடைய செய்து உள்ளது, காலை கண்காணிக்கும் ஆசிரியர் மதியமும் கண்காணிப்பு பணியில் ஈடுப்படும்போது அவர் எப்படி மாணவர்களுக்கு பாடம் போதிக்க முடியும் காலை 8.00 மணிக்கே பள்ளிக்கு வருகைத்தந்து காலை உணவை கண்காணித்து பின்பு காலைவழிபாட்டிற்கு மாணவர்களை ஒழுங்குப்படுத்தி கலந்துக் கொள்ள செய்து ஒரு வினாடி கூட ஓய்வே இல்லாமல் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்.
அதனை தொடந்து மதிய உணவு திட்டத்தையும் கண்காணித்து அதன் பின்னர் மீண்டும் பாடம் நடத்த வேண்டும் ஒரு ஆசிரியர் தொடர்ந்து சாப்பிட கூட நேரம் இல்லாமல் எப்படி பணியாற்ற முடியும் என தெரியவில்லை , பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் இரு ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள் இந்த நிலையில் எப்படி மாணவர்களுக்கு போதிக்க இயலும் என்பதை அறிய வேண்டும் , இத்திட்டம் முழுக்க முழுக்க சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது அத்துறை சார்ந்தவர்கள் தான் கண்காணிக்கப்பு அலுவலராக நியமிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு துணையாக மாணவர்களை ஒழுங்குப்படுத்தி கவனத்துடன் பரிமாறுவதற்கு உதவியாக சுயற்சி முறையில் காலையில் ஒரு ஆசிரியரும் மதியம் ஒரு ஆசிரியரும் கண்காணிக்க பயன்படுத்தவதே சரியானதாக இருக்குமே தவிர , காலை மற்றும் மதியம் என இரு வேலைக்கும் ஒரே அசிரியரை ( nodal teacher ) கண்காணிப்பு ஆசிரியராக நியமிப்பது சரியானதாக இருக்காது எனவே கண்காணிப்பு ஆசிரியர் ( nodal teacher ) நியமன அறிவிப்பை திரும்பபெற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புமிகு இன்சன்ட் திவ்யா அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு ந.லதா அவர்களையும் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு பூ.ஆ.நரேஷ் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



