• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

30 லட்சம் பேருக்கு ‘நோ’ தள்ளுபடி!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவான நகைக்கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு பல்வேறு நிபந்தனைகளை அறிவித்திருந்தது! தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் யார் என்பது குறித்து, அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்ய அரசுக்கு ரூ.6ஆயிரம் கோடி செலவாகும் என தெரிய வருகிறது. இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் பொருந்தும் யாருக்கெல்லாம் பொருந்தாது என்ற விவரம் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து ஏற்கனவே மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட 48,84,726 நகைக்கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளின்படி நகைக்கடன் தள்ளுபடி செய்ய முடியாது என்று முடிவு செய்யப்பட்டு அந்த பட்டியல்கள் அனைத்தும் மண்டல இணைப்பதிவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.

இதற்கு முன் 2021-ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் மற்றும் குடும்ப அட்டையின்படி இடம் பெற்றுள்ள அவர்தம் குடும்பத்தினர், நகைக்கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற நபர், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், எந்த பொருளும் வேண்டாத குடும்ப அட்டையினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கும் கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள், (உதாரணத்திற்கு ஒரு கடன்தாரர் பயிர்க்கடன் 2021 தள்ளுபடியில் பயன் பெறாததால், தகுதி பெறும் நகைக்கடன்தாரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்)

தற்போது கள ஆய்வின்படி, கடன்தாரர் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவரின் குடும்ப உறுப்பினராக இருந்தால் இவர் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியற்றவராவார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கடன்தாரர் ஆதார் எண், குடும்ப அட்டை எண்ணை குறைபாடுடன் அளித்திருந்தால், தகுதி பெறாத நகைக்கடன்தாரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பார். தற்போது கள ஆய்வின்படி, கடன்தாரரின் ஆதார் எண்ணோ, குடும்ப அட்டை முழுமையாக பெற்றிருந்தால், இவர் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி உடையவராவார் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.