மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ திரைப்படம் 30 அக்டோபர் 2026ல் திரைக்கு வருகிறது

திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும் இணைக்கும் உயரிய நோக்குடன் உருவெடுத்துள்ளது ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்’.

கடந்த 2023ம் ஆண்டு மக்களிடையே நேர்மறை சிந்தனைகளையும் பயனுள்ள கருத்துகளையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் கணவன்-மனைவி இடையே நடந்த ஒரு உரையாடலே இந்நிறுவனத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

தனது நீண்டகால மருத்துவ அனுபவத்தில் தான் கண்ட மனிதர்களின் உணர்வுகளையும் சிக்கல்களையும், கலை வடிவமான திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்த மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் முடிவெடுத்தார்.
டாக்டர் எஸ். ராஜா, எம்.டி. நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் இயக்கப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.

கலிபோர்னியா நிறுவனத்தின் இணை நிறுவனரான சுபலட்சுமி ஜெயராம், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகச் செயல்பட்டு படைப்புக்கான முழுத் தயாரிப்புத் துணையையும் வழங்குகிறார்.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ்த் திரைப்படமான ‘செய் செய்யாதே’ சென்சார் தணிக்கை நிறைவு பெற்று திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
இத்திரைப்படம் வரும் 30 அக்டோபர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள் &தொழில்நுட்பக் கலைஞர்கள்:
நடிப்பு: எச். ராஜா, குரு, தர்ஷினி ரெட்டி
பாடல்: ஹரிணி
படத்தொகுப்பு: ராஜா முகமது
ஒளிப்பதிவு: இராமநாத் வாசுமக்கள்
தொடர்பு : பா.சிவக்குமார்




