• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தவறிவிட்ட நகையை மீட்டு தரக்கோரி பெண் புகார்!

Byமதன்

Dec 30, 2021

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் கெளஹர்! தன் மகளுடன் நகைக்கடை பஜார் பகுதிக்கு சென்ற இவர், சாந்தி நகைக்கடை முன்பு, இரண்டரை பவுன் நகை இருந்த தனது கைப்பையை தவற விட்டுள்ளார்! கடைக்குள் சென்று நகை வாங்கிய பின், தனது கைப்பையினை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்!

பின் கடை முன்பாக பொருத்தப்பட்ட சிசி டிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது, உயரமான நபர் ஒருவர் கடை முன்பாக விழுந்து இருந்த கைப்பையை எடுத்து அதில் இருந்த நகையை எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. சம்பவத்தை தொடர்ந்து கெளஹர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசி டிவி பதிவு காட்சிகள் அடிப்படையில் நகை எடுத்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.