• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திரையில் ஹீரோவாக இருந்த விஜய் தற்போது தரையில் ஜீரோ ஆகிவிட்டார் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு..,

ByKalamegam Viswanathan

Oct 3, 2026

நடைபெறுகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்கள் .இந்த பச்சை துரோகத்தால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது தேர்தல் பணி சூடு பிடிக்கிறது அதில் கொடுமை என்னவென்றால், வெற்றி பெற்ற 10 நாட்களில் வாக்களித்த மக்களுக்கும், வாய்ப்பு கொடுத்த தலைமைக்கும், உழைத்த தொண்டர்களுக்கும், நம்பிக்கை துரோகத்தை, பச்சை துரோகத்தை, அமைச்சர் பதவிக்காக, பணத்திற்காக, துணிச்சலாக வெட்ட வெளிச்சமாக செய்திருக்கிறார்கள் என்றால் இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது.

தமிழ்நாட்டு வாக்காளர்களை விஜய் குறைத்து மதிப்பிட்டாரோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுகிறது. மக்கள் தீர்ப்பே ,மகேசன் தீர்ப்பு என்பது வலிமையானது. அதை எந்த உழைப்பும் இல்லாமல், தியாகம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யாமல் ,கடந்த தேர்தலில் அதிர்ஷ்டத்தால் கிடைத்த அதிகாரத்தை, ஆணவத்தால் அடுத்த கட்சியை அடுத்த கட்சி அழித்துவிட்டு, இனி தமிழ்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அதுவும் தவெக மட்டும் தன் இனி தமிழகத்தில் இருக்கும் என்று ஆணவப் பேச்சால், சர்வாதிகார தோனியால் இவை எல்லாம் விஜய் கடந்த நான்கு மாதங்களில் செயல்படுத்தி வருவதால் விஜயின் ஆளுமை கேள்விக்குறியாகிவிட்டது.

திரையில் ஹீரோவாக வலம் வந்த முதல்வர் விஜய் தற்போது தரையில் ஜீரோவாக தடுமாறி கொண்டிருக்கிறார் .அதனால் தவெக வேட்பாளர்கள், அமைச்சர்கள் பிரச்சாரத்தில் செல்லுகின்ற இடமெல்லாம் வாக்காளர்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார்கள்.

எந்தவிதமான நியாயமான காரணம் இல்லாமல் அதிமுகவில் ராஜினாமா செய்தவர்களுக்கு ,தவெகவில் அடைக்கலம் கொடுத்து போட்டியிட வாய்ப்பு கொடுப்பது என்பது எந்த வித தர்மத்தின் நியாயம்.

தவெக நம்பி தோற்றுப் போனவர்கள் இப்போது எங்கே போனார்கள். விஜயை நம்பி அவர்கள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறார்களே? அவர்களுக்கு என்ன பதில் கூறுவார், எப்படி ஆறுதல் கூறுவார் .அவர்களுக்கு எப்படி பொதுவாழ்வில் வாய்ப்பு கொடுப்பார் என்று ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் கூட, இன்றைக்கு தவெகவில் துரோகத்தின் அடையாளமாக களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் மட்டும் அல்ல, அவர்களை ஆதரித்துச் செல்லும் அமைச்சருடன் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்கள் .

வாக்காளர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த காட்சி எல்லாம் சாட்சிகளாக இருக்கிறது .ஆகவே செல்கின்ற இடங்கள் எல்லாம் கடும் எதிர்ப்பு எதிர்கொண்டு, வேட்பாளர்களை அமைச்சர்களை வாக்காளர்கள் முற்றுகையிடும்இது போன்ற காட்சிகள் எல்லாம் கடந்த காலங்களில் மக்கள் வெளிப்படுத்தியது இல்லை.
பொதுமக்கள் திரும்பிப் போ என வேட்பாளர்களை அமைச்சர்களை கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது என்றால் இவரின் கோபத்தை வெளிப்பாடாகத்தான் பார்க்க முடிகிறது .

இதனால் படுத்துக்கொண்டே ஜெயிப்போம், விஜயின் முகத்தை காட்டினால் 30 லட்சம் வாக்குகள் விழும். விஜயை எம்ஜிஆர் என்று கப்சா விட்டுக் கொண்டிருந்த விஜயின் படம் தமிழக வாக்காளர்களிடம் தற்போது எடுபடவில்லை விஜயின் ரீல் தற்போது அறுந்து போய்விட்டது.

இரண்டு தொகுதியில் தோல்வி பயத்தால் முதல்வர் விஜய் நேற்று 39 ஊர்கள் வழியாக ரோடுசோ சென்றார்கள். ஆட்களை இல்லாத இடங்களில் தேவை இல்லாமல் பல கிலோமீட்டர் இருக்கு தடுப்புகள் அமைத்தனர் .இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்ததோடு, அமெரிக்க அதிபர் ரஷ்ய அதிபர் என வெளிநாட்டு அதிபர்கள் வருகின்ற போது கூட சாலைகள் இருபுறமும் இவ்வளவு தடுப்புகள் அமைத்தது கிடையாது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளை தடுப்புகள் அமைத்து கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி அன்றாட நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் வாக்காளர்களும், பொதுமக்களும் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்கள் .
முதல்வர் விஜய் இதெல்லாம் அறிந்துள்ளாரா என தெரியவில்லை.

பொதுவாக விஜய் பங்கேற்கும் எந்த பரப்புரை நிகழ்வானாலும் கடந்த காலங்களில் வாகனத்தை விட்டு இறங்காமல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். தவெகவினரும் விஜய் 5 நிமிடம் வந்தாலே போதும் அவரின் கரிஷ்மா, வசீகரம் ,கவர்ச்சி எங்களுக்கு வெற்றியை தேடி தரும் என்று ஒரு மாய பிம்பத்தை கட்டமைத்து வந்தார்கள் .

ஆனால் கள நிலவரம் ஆசை அறுபது நாள், மோகம் 30 நாள் என்ற வகையில் விஜயின் ராஜா வேஷம் ,தளபதி வேஷம் கலைந்து போச்சு என மக்கள் உரைத்த குரலில் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்களை மட்டுமல்ல யாரையும் கவர்ச்சியால் கவர்ந்துவிட முடியும் என்ற முதல்வருக்கு தலையில் இடி விழுந்தது போல தவெக வேட்பாளர்கள் இந்த இடைத் தேர்தலில் கவிழ்ந்து விடப் போகிறார்கள் என்ற உளவுத்துறையின் அறிக்கை இன்றைக்கு விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது

தர்மம் ஒரு நாளும் தோற்காது துரோகம் ஒரு நாளும் வெல்லாது . நீதியை நிலைநாட்ட மக்கள் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டார்கள். நீதி கேட்டு வருகின்ற எடப்பாடியாருக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள் இந்த தாய் தமிழ்நாட்டு மக்கள் தர்மம் தலைகாக்கும் இரட்டை இலை மீண்டும் மலரும்.