• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உத்திரப்பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவிப்பு

Byகாயத்ரி

Dec 29, 2021

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவிய போதிலும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன.

ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்கிடையே, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தை கொரோனா பாதிப்பு மாநிலமாக அறிவித்து, அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், உத்தரப் பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அறிவிப்பு மார்ச் 31-ம் தேதி அல்லது மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தில், நாள்தோறும் 50க்கும் குறைவான பேருக்கே கொரோனா தொற்று உறுதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.