• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

செக்கானூரணி சாலையில் உள்ள பட்டுப்போன மரங்களை அகற்ற பள்ளி மாணவர்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 18, 2026

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் முதல் செக்கானூரணி செல்லக்கூடிய சாலையில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மின்வாரிய அலுவலகம் உள்ளிட்டவை உள்ளது இந்த வழியாகத்தான் கீழப்பட்டி முதலைக்குளம் கண்ணனூர் கருமாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் மின்வாரியம் அலுவலகத்தை அடுத்து 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பட்டு போய் சாலையில் விழுக்கூடிய நிலையில் உள்ளது காலை மாலை என விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்களில் 500க்கும் மேற்பட்டோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் உள்ள பட்டுப்போன தென்னை மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே இதன் அருகில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்த நிலையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்து சாலையின் ஓரங்களில் கிடைக்கிறது. இந்த நிலையில் பட்டு போய் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் சாலையின் ஓரங்களில் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த தென்னை மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.