• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

இரும்பாடி ஊராட்சியில் வாகனம் இல்லாததால் 3 கி.மீ தூரம் குப்பை வண்டியை தள்ளி செல்லும் ஊராட்சி பணியாளர்கள்..,

ByKalamegam Viswanathan

Sep 18, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சியில் இரும்பாடி சின்ன இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில் வசித்து வருகின்றனர்.

இரும்பாடியில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் சுமார் 3 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் மேலும் இந்த ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருகில் சாலாச்சிபுரம் கணேசபுரம் சாலையில் உள்ள மயான பகுதி அருகே குப்பை கிடங்கில் ஊராட்சி பணியாளர்கள் கொட்டி வருகின்றனர். இந்த ஊராட்சியில் குப்பைகள் கொண்டு செல்லக்கூடிய வாகனங்கள் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள குப்பை கிடங்கிற்கு குப்பைகளை சேகரித்து தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியை தள்ளிக் கொண்டு நடந்தே செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடும் வெயிலில் நடந்த செல்லும் பணியாளர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு செல்லும்போது குப்பைகளையும் சேகரித்து செல்ல வேண்டுமென ஊராட்சி நிர்வாகம் கூறப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் கையுறையில்லாமல் குப்பைகளை சேகரித்தும் துப்புரவு பணியாளர்கள் பெண்கள் வயதான நிலையில் குப்பை வண்டியை தள்ளிக்கொண்டு நடந்து செல்லும் நிலையை மாற்ற வேண்டும் குப்பை வாகனத்தை உடனடியாக பழுதை நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்