தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலே பரப்பி வரும் உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்கள் குறித்து பல்வேறு விவாதங்கள் தற்போது எழத் தொடங்கியிருக்கிறது.
கண்கட்டி வித்தையாக தமிழக மக்களிடத்தில் ஒரு மிகப்பெரிய மாய பிம்பத்தை விஜய்காக கட்டமைத்து, அதிலே வெற்றி பெற்று, முதலமைச்சர் அரியணையில் விஜய் அமர்ந்திருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இப்போது இந்தியா முழுவதும் வெவ்வேறு மொழிகளில் பரப்பப்படும் இந்த ரீல்ஸ், தவெக கட்சியின் தலைவர் ஜோசப் விஜயையும் ,அவரது ஆட்சியையும். புகழும் வகையில் கட்டமைக்கப்படுவது அவருடைய கடமையாக வைத்திருக்கிறார்கள். இந்த பிரச்சாரத்தின் பின்னணியிலே வெளிநாட்டு தமிழர்களின் பங்களிப்பு மட்டுமல்லாது, வெளிநாட்டு சக்திகளின் நிதி உதவியும் இருக்கலாமா என்ற சந்தேகங்களும் புகார்களும் தற்போது விவாதப் பொருளாக செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. முதல்வர் விஜய் லண்டன் பயணம் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா?
தேர்தலுக்கு முன்பாகவே தவெக கட்சி சமூக வலைதள பிரச்சாரத்தின் முன்னணியிலே இருந்தது எல்லோரும் அறிந்தது. ஒன்றுதான், தவெக கட்சியின் திடீர் வெற்றிக்கு காரணம் சமூக வலைதளங்களின் தாக்கம்தான், குறிப்பாக தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக தவெக கட்சியின் வலைதள பிரச்சாரம் உச்சத்தை அடைந்ததையும் அரசியல் கட்சிகள் கவனிக்க தவறிவிட்டன. அதனால் முதல்வர் விஜய்யின் அந்த சமூக வலைதளங்கள் பிம்பம் எந்தவிதமான சேதாரம் இல்லாமல் வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது.

முதல்வர் விஜய் நெருங்கிய நண்பரான ஜெகதீஷ் பழனிச்சாமி
தி ரூட் அமைப்பை நீண்ட காலமாக நடத்தி வருகிறார்.
ஆரம்ப காலங்களில் முதல்வர் விஜய்யின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படம் குறித்து பாசிட்டிவாகவும் அந்த படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக மட்டுமே இயங்கி வந்த இந்த ரூட் மீடியா திரை உலகில் உச்சத்திலே இருந்த ரஜினிகாந்த், அஜித் குமார் போன்ற திரையுலகின் முன்னணியான பிரபலங்களின் உள்ளிட்ட போட்டி நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது அதற்கு நெகட்டிவ் இமேஜ் எதிரான பிரச்சாரங்களில் இந்த ரூட் அமைப்பு செய்தது என்று குற்றச்சாட்டும் திரையுலகத்திலே உண்டு. அதை மறைக்கத்தான் இன்றைக்கு அஜித் அவர்களுடைய கார் ரேஸை பச்சை கொடி அசைத்து துவங்கி வைக்க லண்டன் சென்றிருக்கிறார் முதல்வர் விஜய்.
அதே உத்தியை அரசியலிலும் “தி ரூட்” அமைப்பு கையாண்டு வருகிறது என்ற செய்தியோடு சமீப காலமாக முதலமைச்சர் விஜய்யை பிரதமராக்கும் சவாலுடன் இந்தியா முழுக்க வெவ்வேறு மொழிகளில் முதல்வர் விஜய் குறித்தும், தவெகஆட்சி குறித்தும் பல பொய்யான ரீல்ஸ்கள் சுற்றி சுழன்று வந்து கொண்டே இருப்பதை நாம் கவனிக்க தவறக்கூடாது.

இதற்காகவே தவெக தலைமையில் மத சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என்ற ஒரு புதிய கூட்டணியை உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இன்றைக்கு வந்திருக்கிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்ற கட்சியினர் குறிப்பாக காங்கிரஸ், இந்த கூட்டணியிலே இடம்பெற்றிருப்பது ராகுலின் பிரதமர் கனவு கேள்விக்குறியாக இருக்கிறது.
பிரதமராக விஜய் முன்னிறுத்தப்படுவாரா? என்ற கேள்வியோடு இந்த கூட்டணியிலே ஒட்டாத வெற்றிக் கூட்டணி இன்றைக்கு பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் விவாதம் எப்போது வேண்டுமானாலும் வெடித்து பிரளயத்தை ஏற்படுத்தலாம்.
இன்றைக்கு விஜய் எளிமையானவர் என்ற பிம்பத்தை உருவாக்க அவர் தலைமைச் செயலகத்தில் தரையிலே அமர்ந்து டிபன் கேரியர் உணவை உண்பது போன்ற ஏஐ படங்களின், ரீல்ஸ்கள் பரப்பப்படுகின்றன. ஆனால் ரியலாக மேட்டூர் அணையை திறந்து வைக்க முதல்வர் விஜய் வரலாற்றிலே இல்லாத வகையிலே ஆறு கோடி ரூபாய் செலவில் பேரிகார்டர் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்தார்கள் என்கிற செய்தி மறைக்கப்படுகிறது.
இப்போது லண்டன் பயணம் அரசு பயணமாக முதலீட்டார்களில் ஈர்ப்பது என்று சொன்னாலும், சரியான திட்டமிடலோடு தான் லண்டன் பயணம் அமைந்திருக்கிறதா?
மக்கள் வரிப்பணத்தை எப்படி எளிமையாக முதல்வர் செலவிடுவார் என்ற விவாதம் நடந்து கொண்டே இருந்தாலும், லண்டனில் இன்றைக்கு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கிற அந்த நட்சத்திர அந்தஸ்து விடுதியிலே தங்கியிருப்பதை குறையாக சொல்லவில்லை. அவர் எவ்வளவு எளிமையாக ரியலாக நடந்து கொள்கிறார் என்பதை தயவுசெய்து நாம் கவனத்திலே கொள்ள வேண்டும்.
அவர் எளிமை என்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மூலமாக வருவதல்ல; அது நேச்சுரல் இன்டெலிஜென்ஸ் மூலமாக நமக்கு கிடைக்க வேண்டும். ஆகவே இன்றைக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் அறை மாற்றத்திற்கும் வெள்ளை அடிப்பதற்கும் மராமத்து செய்வதற்கும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எளிமையின் புதிய இலக்கணமாக விஜய்யை இன்றைக்கு ரீல்ஸ் வெளியிடுவது உண்மையிலேயே மக்கள் இன்றைக்கு அதிலே ஏமாந்து போகிற ஒரு சூழ்நிலையை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டே வருகிறார்கள்.
தவெக தலைமை எந்த ஒரு வெளிப்படையான மறுப்பையோ அல்லது தடுப்பு நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. ஆகவே குதிரை பேரம் நடக்கவில்லை என்று அவர்கள் மறுத்து வந்தாலும் கூட, இன்றைக்கு ராஜினாமா செய்தவர்களை, தவெகவிலே இன்றைக்கு நிற்க வைக்கிறார்கள் என்று சொன்னால், இது குதிரை பேரமா, கழுதை பேரமா, சாக்கடை பேரமா, ஆகவே அரசியல் நாகரிகத்தை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும்.
இன்றைக்கு வேண்டுமானால் உங்களுக்கு காலம் கை கொடுக்கலாம்; எல்லா நேரங்களிலும் காலம் உங்களுக்கு கை கொடுக்காது. உங்கள் கட்சியை நீங்கள் வளர்ப்பதிலே உங்களுக்கு முழு உரிமை இருப்பதைப் போல, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கட்டிக்காட்டும் உரிமை எடப்பாடியாருக்கு இருக்கிறது என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது.
ஆகவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏழை எளிய சாமானிய மக்களுடைய கழகத்தை ஒரு சாமானியனாக கட்டிக்காத்து, பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே அவர் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறாரே. ஆகவே மக்களை நீங்கள் சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும்; உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நல்ல ஒரு மாற்றம் வேண்டும் என்றுதான் உங்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. ஆகவே இந்த இடைத்தேர்தல் மதுராந்தகம் தாராபுரம் மக்களுக்கு மாற்றமும், உங்களுக்கு ஏமாற்றமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஏற்றமும் தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என கூறினார்.








