• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை..,

ByPuthar Pandian P

Sep 11, 2026

இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் போலீஸ் வாகன சோதனை சாவடி அமைப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜெயக்குமார் நேரில் சுவாகன சோதனையில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் முன்னிட்டு அமைச்சர்கள் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையான பள்ளப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தியாகி இமானுவேல் சேகரன் நினைவு முன்னிட்டு மரியாதை செலுத்த செல்லும் வாகனங்கள் முறையான அனுமதி பெறப்பட்டு இருக்கிறதா? என சோதனை செய்து போலீசார் ஈடுபட்டனர்,
இந்த போலீஸ் சோதனைச் சாவடியில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தெய்வம் ஆகியோர் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

மேலும் போலீஸ் துனை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ் பெக்டர்கள் உட்பட 100க்கு மேற்பட்ட போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர்.