தமிழக அமைச்சர்கள் மரிய வில்சன், வெங்கடரமணன் ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இறங்கினர். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பயணியர் விடுதிக்கு வருகை வந்தடைந்தனர்

தமிழக நிதி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மரிய வில்சன் , உணவு மற்றும் உணவு பொருள் வழங்கும் துறை அமைச்சர் வெங்கட ரமணன் ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் துர்கா மூர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
நிலக்கோட்டை தாசில்தார் ராமசாமி , அம்மையநாயக்கனூர் செயல் அலுவலர் (பொறுப்பு) இளவரசி உட்பட அரசு அதிகாரிகள் பலர் வந்து இருந்தனர்

அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக கொடைரோடு அம்மைநாயக்கனூர் பகுதியில் மின் நிறுத்தம் என மின்சார வாரியத் துறை அதிகாரி மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது,
ஆனால் தமிழக அமைச்சர்கள் வருகையால் கொடை ரோடு அம்மைநாயக்கனூர் பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படவில்லை,

கொடைரோட்டில் இருந்து அமைச்சர்கள் கார் மூலம் புறப்பட்டு கொடைக்கானல் சென்றனர். அதன் பிறகு இப்பகுதியில் 2.30 முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது








