குறிப்பாக 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை திருப்பரங்குன்றம் பேசு பொருளான அந்தப் பகுதியில் பணியாற்றக்கூடிய ஊடகவியலாளர் ஒருவருக்கு அதிலும் அவர் பணி செய்யக்கூடிய நிறுவனத்தின் பெயரோடையே உங்கள் வாகனத்திற்கான அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது உடனடியாக இந்த பணத்தை கட்டுங்கள் என்று குறுந்தகவல் வந்தவுடன் அவர் சற்று என்று சுதாரித்துக் கொண்டார்.

சரி இவருக்குத்தான் அப்படி என்றால் வேறு சில செய்தித்தாள்களில் பணியாற்றக்கூடிய முன்னணி செய்தியாளர்களுக்கும் இதேபோன்று குறுந்தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
இந்த நிலையில் சமூக ஆர்வலராக இருக்கக்கூடிய மதுரை மாடக்குளம் பெரியார் நகர் கிழக்கு குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த காளமேகம் என்பவருக்கும் இதேபோன்று குறுந்தகவல் வந்திருக்கிறது.

இந்த நிலையில் அவர் சக ஊடகவியாளர்களாக இருக்கக்கூடிய சகோதரர்களிடத்தில் பேசிய அப்போது அவர்களும் எங்களுக்கும் இதுபோன்று குறுஞ்செய்தி வந்திருக்கிறது ஆனால் நாங்கள் சுதாரித்துக் கொண்டு அவற்றை எதையும் கிளிக் செய்ய வில்லை யாருக்கும் அனுப்பவில்லை உடனடியாக அதை டெலிட் செய்து விட்டோம் என்றனர்.
தற்போது ஊடகவியாளர்கள் குறிவைத்து அவர்களுடைய பெயர் பணி செய்யும் நிறுவனத்தின் பெயர் அவர் வசிக்கக்கூடிய பகுதி இப்படியாக அனைத்து தகவல்களோடு குறுந்தகவலாக வரக்கூடியதை பார்த்தவுடன் ஊடகவியலாளர்கள் ஏற்கனவே விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வரக்கூடிய வேலையிலே சற்றென்று சுதாரித்துக் கொண்டனர்.

குறிப்பாக ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள் இருந்தாலும் மக்களாகிய நாம் சுதாரிப்போடு இருந்தால் நிச்சயம் எதையும் சாதிக்கலாம்.








