• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் செயற்கை நுண்ணறிவு இயக்கம்..,

BySeenu

Sep 5, 2026

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்லும் நோக்கில், ரீஜெனெசிஸ் ஏஐ சார்பில் பெங்களூரு, கோவை, புனே, மும்பை ஆகிய 4 நகரங்களில் “அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு” என்ற தலைப்பில் தலைமைத்துவ மாநாடுகள் நடத்தப்பட்டன.

கோவை தாஜ் விவாந்தா ஓட்டல் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் தொழில்துறையினர், உற்பத்தித் துறை தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் உற்பத்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு, தொழில் 4.0, அறிவார்ந்த தானியக்கம், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 5 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

ரீஜெனெசிஸ் ஏஐ நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் மார்கோ சரவஞ்ஜா தலைமையில், ஒரு கோடி இந்தியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு அறிவு மற்றும் திறனை வழங்கும் இலவச பயிற்சி முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களைத் தாண்டி 2 மற்றும் 3-ம் நிலை நகரங்கள், கல்லூரிகள், பள்ளிகள், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், தொடக்க நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கும் செயற்கை நுண்ணறிவை கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கம் எனவும்,

செயற்கை நுண்ணறிவு திறன்களை அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் இந்திய மொழிகளிலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும்” என்ற கொண்டு செல்லும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..