மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், அருந்ததியர் வடக்கு மேட்டுத்தெரு பகுதியில் உள்ள அஜப்பன் கோவிலில், மூன்று தலைமுறைகளாக குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நபர்கள் அருந்ததியர் சமூக மக்கள் அஜப்பன் கோவில் கட்டுவதற்கும், சாமி கும்பிடுவதற்கும் இடையூறு ஏற்படுத்தி வருவதாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களை சாதிய ரீதியாக அவமதித்து வருவதாகவும், தனி நபர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதிதமிழர் பேரவை அமைப்பு சார்பில் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் அருந்ததியர் வடக்கு மேட்டு தெருவில் 25பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திருப்பரங்குன்றம் மலையில் போராட்டம் நடத்துவோம் என ஆதித்தமிழர் கட்சி சார்பில் தெரிவித்தனர்.








