• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் – முதல்வர் விஜய்..,

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழை மக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம்.

புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவுச் சான்றிதழை இணைய வழியில் பதிவிறக்கம் செய்யலாம்.

ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே Digital Driving Licence டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் வழங்க வசதி ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் “Anywhere Registration /Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.

முக்கிய சிறப்பம்சங்கள்:

அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் QR code-ஐ scan செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும்.

இந்த முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.