மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரம் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன இந்த குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளாக உள்ளது மேலும் குடியிருப்பு அருகில் சோழவந்தான் பேட்டை பகுதியிலிருந்து தேனூர் வரை செல்லக்கூடிய தேனூர் கால்வாய் செல்கிறது கடந்த சில ஆண்டுகளாக இந்த கால்வாய் முறையாக தூர் வாராத நிலையில் பராமரிக்காத காரணத்தால் கால்வாய் முழுவதும் புல் மற்றும் செடிகள் படர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது

குடியிருப்பு அருகில் செல்லும் கால்வாய் சேரும் சகதியுமாக பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலையில் உள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் குடியிருப்பு அருகில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது வெப்ப காற்று வீசி வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டவுடன் புல் மற்றும் காய்ந்த செடிகளில் தீ மள மள என பரவியது இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்த பொதுமக்கள் அலறி அடுத்து கொண்டு வீட்டின் வெளியே ஓடிவந்தனர்

அருகில் இருந்தவர்கள் சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர் இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் வந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தாலும் குடியிருப்பு பகுதிக்குள்தீ பரவி பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்
சுமார் 40 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு பட்டா மின்சாரம் உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் இல்லை என கூறுகின்றனர் ஏற்கனவே மூன்று முறை தீ விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் தற்போது நாலாவது முறையாக தீப்பிடித்ததாகவும் தங்களுக்காக இல்லை என்றாலும் தங்கள் குழந்தைகளுக்காக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வசதி ஏற்படுத்தி தர வேண்டும் அல்லது சோழவந்தானின் வேறு பகுதியில் மாற்று இடம் கொடுத்து எங்களுக்கு உதவ வேண்டும் இதற்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர்
தமிழக முதல்வரான விஜய் எங்களை போன்று சிரமத்தில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்




