தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் ராமன் கோ கம்பெனி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்காக ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு பிடித்தம் செய்த இ எஸ் ஐ ஈ பி எப் தொகையை உரிய அலுவலகத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக செலுத்தாமல் கையாடல் செய்து வருகிறார்கள்.

மேலும் 96 நபர்கள் வேலை செய்கின்ற இடத்தில் வெறும் அம்பது அறுபது பணியாளர்களை வைத்து வேலை செய்து கொண்டு மீதமுள்ளவர்கள் கணக்கில் காட்டி மஸ்டர் ஊழல் செய்து வருகிறார்கள். அதைக் கண்டித்து நான்காவது நாளாக என்றும் போராட்டம் தொடர்ந்து கொண்டு வருகிறது. பணியாளர்கள் இடத்தில் பிடித்தம் செய்த பணத்தை உரிய அலுவலகத்திற்கு செலுத்தி கணக்கில் வர வைக்காத அச்சத்தில் போராட்டம் தொடர்ந்து கொண்டே வரும் என்பதையும் அரசருடைய கவனத்திற்கு தெரியும் விதமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட உளவுத்துறை மற்றும் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் இவர்களுக்கெல்லாம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்கப்பட்டும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் நகராட்சியில் இப்படி ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்ததும் கம்பம் சட்டமன்ற தொகுதி ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் இந்திய குடியரசு தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து போராட்டத்தை கைவிடும் படி சொன்னார்.
ஆனால் எங்கள் பணியாளர்களுடைய ஊதியத்தில் பிடித்தம் செய்த இ எஸ் ஐ இபிஎப் கொள்ளையடித்த பணத்தை உரிய அலுவலகத்திற்கு செலுத்தி கணக்கில் வைத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று அவரிடம் தெரிவித்த பின்பும் அவரும் கண்டும் காணாமல் சென்று விட்டார்.




