தென் தமிழ்நாட்டின் வான்வழி இணைப்பை மேம்படுத்தும் வகையில், VIL Aviation Private Limited நிறுவனத்தின் VIL Heli Station – South India Helicopter Operations Base ஹெலிகாப்டர் செயல்பாட்டு மையம் மதுரையில் தொடங்கப்பட்டது.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கருமுத்து ஹரி தியாகராஜன் மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த மையம் மூலம் மருத்துவம், அவசரகால சேவைகள், தொழில் மற்றும் சுற்றுலா சார்ந்த ஹெலிகாப்டர் சேவைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த வழிபாட்டுத் தளங்களான ராமேஸ்வரம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.





