• Thu. Aug 27th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் மனிதாபிமானமின்றிச் சென்ற ஓட்டுநர்..,

BySeenu

Aug 27, 2026

​ கோவை, சரவணம்பட்டி பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதித் தள்ளி விட்டு, நிற்காமல் கடந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், இருசக்கர வாகனம் ஒன்று வழக்கம்போல் ஓரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
​அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஓரமாக நின்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக இடித்துத் தள்ளியது. விபத்து நடந்த பிறகும், காரை நிறுத்தாமல் எதுவும் நடக்காதது போல ஓட்டுநர் அங்கு இருந்து வாகனத்தை வேகமாக இயக்கிச் சென்று உள்ளார்.

இந்த விபத்து தொடர்பான சி.சி.டி.வி அல்லது வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

​”ஒருவேளை அந்தச் சமயத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தின் அருகில் குழந்தைகளோ ? அல்லது முதியவர்களோ ? நின்று இருந்தால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும் ? மனிதாபிமானமே இல்லாமல் விபத்தை ஏற்படுத்தி விட்டுப் தப்பிச் செல்லும் இதுபோன்ற வாகன ஓட்டிகளால் தான் சாலையில் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோகின்றன” என அப்பகுதி மக்கள் ஆத்திரத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

​இதேபோன்று விபத்து ஏற்படுத்தி விட்டுத் தப்பியோடும் அலட்சியப் போக்கு கொண்ட வாகன ஓட்டிகளைக் காவல் துறையினர் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் உடனடியாகக் கண்டறிந்து, அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.