• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம்..,

ByM.JEEVANANTHAM

Aug 26, 2026

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

புவி பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் கைவிடுவதாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்றும் , முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் இற்றப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அமைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், குறுங்காடுகளை வளர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும் தூர்வாரி மழை நீரை சேகரித்து எல் நினோ பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என்று, தீர்மானம் இயற்றப்பட்டது.