மதுரை ஒருங்கிணைந்த மாவட்டங்களான மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் ஆகியவை ஒன்றிணைந்து உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டியில் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே ராஜு ஆர் பி உதயகுமார் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் எம்எல்ஏ நீதிபதி சோழவந்தான் மாணிக்கம் ஒன்றிய செயலாளர் மகேந்திர பாண்டி பெருமாள் ரவிச்சந்திரன் காளிதாஸ் சிபிஆர் மணி மலையாளம் அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் வாவிடமருதூர் ஆர் பி குமார் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன் பண்ணை குடி கிளைச் செயலாளர் கூட்டுறவு சங்க தலைவர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து ஆர்ப்பாட்டம் குறித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பேரவை முருவார்பட்டி ராகுல் ராஜ்மற்றும் சோழவந்தான் பேரூர் கழக நிர்வாகிகள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் வடக்கு ஒன்றியம் அலங்காநல்லூர் ஒன்றியம் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






