மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொகுதியான மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக வெற்றி கழகம் – கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்திற்காக அரசு அலுவலக வளாகத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து மதுரையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக வெற்றிக்கழக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மருதுபாண்டி தலைமையில், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த ஆர்பாட்டத்திற்காக யூனியன் அலுவலக வளாகத்தில் இருந்து அனுமதியின்றி மின்சாரம் எடுக்கப்பட்டதாக தகவல் தகவல் வெளியாகிய நிலையில்,
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யூனியன் அலுவலக வளாகத்தில் இருந்து கேபிள் மூலம் மின்சாரம் எடுக்கப்படுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அரசு அலுவலகத்தில் இருந்து அனுமதியின்றி மின்சாரம் பயன்படுத்தியது தொடர்பாக மின்வாரியம் மற்றும் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் சொந்த தொகுதியான திருப்பரங்குன்றத்தில் தவெக கட்சி ஆர்ப்பாட்டத்திற்காக அரசு அலுவலகத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அக்கட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளரை தொடர்பு கொள்ள முயற்சி செய்த பொழுது அவரது உதவியாளர் அலைபேசி எடுத்து பேசினார் இன்று காலை நடந்த தமிழக வெற்றிக்கழகம் ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது இதற்கு திருப்பரங்குன்றம் யூனியன் ஆபீசிலிருந்து மின்சாரம் திருடப்பட்டுள்ளது அது பற்றி தங்களுக்கு ஏதும் தெரிய வந்துள்ளதா என கேட்டோம் இல்லை எனக்கு எதுவும் தெரியாது இது குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியாளர்களும் தெரிவுபடுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.




