திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு நேற்று (27.12.2021) தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் உத்தரவினை அடுத்து திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் பாசன திட்டத்தில் திருமூர்த்தி அணையிலிருந்து 94 ஆயிரத்து 527 ஏக்கர் பயன்பெறும் வகையில் 135 நாட்களுக்கு ஐந்து சுற்றுகளாக மொத்தம் 9500 அடி நீர் திறந்து விடப்பட உள்ளது. முதல் கட்டமாக இன்று மாலை பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 250 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. செய்தி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களும் தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதன் மூலம் திருப்பூர் உடுமலை மடத்துக்குளம் பல்லடம் காங்கயம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி சூலூர் ஆகிய பகுதிகளில் பாசன நிலங்கள் பயனடையும். திறந்து விடப்பட்டுள்ள நீரை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி நல்ல மகசூல் எடுக்க வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் வினோத் ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி முருகன் உட்பட அதிகாரிகள் நிர்வாகிகள் விவசாயிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)