அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவின் ஊழல் ஆட்சியை எதிர்த்து ஆட்சிக்கு வந்தவுடன் தனது கடைசி படமாக மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நடித்து வெளியிடப்பட்டது போல் இன்று அதே திமுக ஆட்சியின் ஊழலை எதிர்த்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள கடைசி படமான ஜனநாயகம் படம் வெளியாகி பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து விஜய் அவர்கள் படம் நடிப்பார்களா என்ற கேள்விக்கு,
மக்களின் விருப்பம் எதுவோ அதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என்று கூறினார்.
நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் தற்போது வரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உயர்கல்வி துறை அமைச்சர் இதுகுறித்து பேசி வருகிறார்கள். சரியான நேரத்தில் முதல்வர் இது குறித்து அறிக்கை வெளியிடுவார்.
காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்துள்ளது பற்றிய கேள்விக்கு
அனைத்து மக்களும் இதை வரவேற்கிறார்கள் மாணவர்கள் பட்டினி கிடந்த காலத்தில் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர் ஆகையால் இந்த திட்டத்திற்கு அவர் பெயர் வைப்பதே சாலச் சிறந்ததாகும்.
அம்மா உணவுத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து செயல்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு
அதிமுக திட்டங்களை செயல்படுத்துவதால் அதிமுகவை முழுக்க கையகப்படுத்த முயற்சிக்கிறாரா முதல்வர் என்ற கேள்விக்கு,
1973 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விசில் அடிச்சான் குஞ்சுகள் என்ற நிலையில் அன்றைய இளைஞர்கள் எம்ஜிஆருக்கு அமோக ஆதரவு அளித்ததை போல் தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்துள்ளார்கள்.
மகளிர் உரிமை தொகை 2500 வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு,
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய பின்பு அதைப்பற்றி கூறுகிறேன்
இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக வெற்றி கழக தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




