• Tue. Apr 30th, 2024

கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.257 கோடி – தொழிலதிபர் கைது!

உத்தரப்பிரதேசத்தில் கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த தொழிலதிபர், வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் , வாசனை திரவியங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பான் மசாலா , குட்கா தயாரிக்கும் ஆலைகளை நடத்திவருகிறார் .


அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது . இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் அதிரடியாகச் சோதனை செய்தனர் . மேலும் கான்பூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது .

அப்போது இரும்பு பீரோவில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் . மேலும் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது கட்டுக்கட்டாக 257 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியது . பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை எண்ணி முடிப்பதற்குள் அதிகாரிகள் சோர்ந்துபோயினர் . மேலும் கிலோ கணக்கில் தங்க நகைகளும் கண்டறியப்பட்டன . இதுதொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் , வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் தொழிலதிபர் பியூஷ் ஜெயினை கைதுசெய்துள்ளனர் .

பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வருவாயை மறைத்தது , போலி ரசீதுகள் மூலம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ .257 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *