• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சாத்தூர் அருகே பால் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து..!

ByK Kaliraj

Jul 18, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் பால்பண்ணையிலிருந்து தூத்துக்குடி ஆவின் பால் பாக்கெட் ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரி சாத்தூரிலிருந்து கோவில்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது.

சின்ன ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க டயர் வெடித்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் லாரி ஓட்டுநர் ராஜா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். .மேலும் கண்டெய்னரில் இருந்த மூன்றரை டன் எடை கொண்ட பால் பக்கெட்கள் அனைத்தும் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் பால் சாலையில் கொட்டியது. சம்பவம் அறிந்து வந்த போலீசார் கிரெயின் உதவியோடு சாலையை நடுவே கவிழ்ந்த லாரியை மீட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், இரண்டரை டன் எடை அளவு பாரம் ஏற்ற வேண்டிய லாரியில் கூடுதலாக ஒரு டன் அளவில் பாரம் ஏற்றியதால் டயர் வெடித்து விபத்து நேரிட்டது தெரியவந்துள்ளது.