• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி..!

BySeenu

Jul 18, 2026

கோவை, கணுவாய் பகுதியில் மலை மீது கருஞ்சிறுத்தை நடந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. காட்டுயானைகள் அதிகளவு உள்ள நிலையில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை ஆடு, கோழிகளை வேட்டையாடியது.

இந்த நிலையில் இன்று கணுவாய் பகுதியில் உள்ள மலை தொடரில் கருஞ்சிறுத்தை ஒன்று நடந்து சென்றுள்ளது. அதனை அப்பகுதி மக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கருஞ்சிறுத்தையை உடனடியாக பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.