• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக விளையாட்டு போட்டிகள்..,

BySeenu

Jul 17, 2026

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன..

இதன் தொடர்ச்சியாக,8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடிய மைதான அரங்கில் நடைபெற்றது…

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ள போட்டிகளுக்கான துவக்க விழா, கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் பரசுராம் தலைமையில் நடைபெற்றது..

இதில் சிறப்பு விருந்தினர்களாக, மண்டல பி.எஃப்.ஆணையர் பிரணவ்,,சன் ஸ்மார்ட் சரவணன்,ரோட்டரி கிளப் இண்டஸ்ட்ரியல் சிட்டி தலைவர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்..

ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் நடைபெற்ற இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உயரம் தாண்டுதல்,ஈட்டி எறிதல்,குண்டு எறிதல்,உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில்,கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் பரசுராமன் மற்றும் துணை தலைவர் கிருஷ்ணகுமார், செயலாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து செய்திருந்தனர்..