• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

நாயக்கன்பட்டி அருகே புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்..,

ByK Kaliraj

Jul 12, 2026

கடந்த வாரம் பேர் நாயக்கன்பட்டி அருகே காரில் மூன்று முறைகளில் இருந்து புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாயில் பெட்டி ஊராட்சி சேர்ந்த சத்யா நகர் சேர்ந்த நாகராஜ் என்பவர் வீட்டில் ஐந்து முறைகளில் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்டார்.

மண் குண்டாம்பட்டியில் உள்ள பெட்டி கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராஜ் (வயது62) என்பவரது பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடம் இருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பெட்டி கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து கடையின் உரிமையாளர் ராஜ்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாரிகளின் கவனக் குறைவு காரணமாக புகையிலைப் பொருட்கள் அதிகம் நடமாட்டம் இருந்து வருகிறது. இனிமேலாவது அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தீவிரப் படுத்துவார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.