மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரத்தில் கொள்முதல் செய்யப்படாத நிலையில் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் எடை குறையவும் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த பகுதியில் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் மலைப்பட்டி மேல மட்டையான் விக்கிரமங்கலம் தென்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்த நெல்கள் நாராயணபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் குவியல்கள் மூடைகளாகவும் 3000திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் குவியல்களாகவும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் வாடிப்பட்டி சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்த நெல்களும் இங்கு கொண்டு வந்து குவித்து வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தினசரி குறைந்த அளவே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து குடோன்களுக்கு எடுத்து செல்வதால் பல்வேறு விவசாயிகளின் நெல்கள் கொள்முதல் செய்யாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மேலும் போதிய இடம் இல்லாத நிலையில் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படாத நிலையில் வயல்களிலும் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் கூடுதலாக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால் சோழவந்தானில் அறுவடை நடைபெறும் இடங்களில் கூடுதலாக மேல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் மற்றும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை தினசரி பணியாட்கள் கொண்டு உலர்த்துவதால் ஏக்கருக்கு ஆயிரம் முதல் 2000 வரை தினசரி கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக கூடுதலாக கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் .அறுவடைக்கு தயாராக உள்ள நெல்களை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் வகையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





