கோவை மருதமலை அருகில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா பங்கேற்றார்(இவர் கோவை சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்). மேலும் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற(மதுரை கிளை) நீதி அரசர் பாரதிதாசன் இதில் பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) முன்னாள் நீதிபதி பாரதிதாசன், இங்கு பட்டம் பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்க்ள் பெண்களாக உள்ளீர்கள் ஒரு காலத்தில் ஆண்கள் தான் அதிகம் இருந்தார்கள் தற்பொழுது பெண்கள் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியான ஒன்று என்றார்.
நீதி துறையில் பெண்கள் பங்களிப்பு அதிகரித்து உள்ளது
என்றும் கீழமை நீதிமன்றங்களிலும் 40% பெண்கள் தான் உள்ளார்கள் என்றும் புதிய Recoupment ல் பெண்கள் தான் அதிகம் வருவார்கள் போல என்றார். அதேசமயம் இன்னும் நிறைய நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்களுக்கு தனி அறைகள் இல்லை அவை எல்லாம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் கடின உழைப்பும் நேர்மையும் தான் உங்களை உயர்த்தும் என்றார்.
பின்னர் சிறப்புரையாற்றிய அமைச்சர் நிர்மல்குமார்
உங்களுக்கெல்லாம் ரோல்மாடல் உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா அவர்கள் தான் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
சமுதாயத்தில் மிக பெரிய அங்கீகாரம் உங்களுக்கு கிடைக்கும் என்றும் மக்களை நினைத்து பணியாற்றிட வேண்டும். ஏனென்றல் இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது நான் அதிகம் பேசவில்லை விரும்பவில்லை, நீதிமன்றங்களை விரிவு படுத்தும் வேலைகளை இந்த ஐந்து ஆண்டுகளில் செய்ய உள்ளோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

உச்சநீதிமன்றம் நீதியரசர் மோகனா உரையாற்றும் போது, நான் இங்கு என்னுடைய பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை தற்போது பட்டமளிப்பு விழா அங்கி கொடுத்ததற்கு நன்றி என கண்கள் கலங்கியபடி தெரிவித்தார்.
புத்தக படிப்பு மட்டும் போதாது, வாழ்வில் பாடங்களை கற்று கொள்வோம் என்றார்.
நாங்கள் படிக்கும் போது இந்த அளவு வசதிகள் இல்லை உலக அனுபவே பெரிதளவு இல்லாமல் மூத்த வழக்கறிஞர்களிடம் இருந்து பணியாற்றி வந்துள்ளோம் என்றார். சட்டக்கல்லூரியில் மிக பெரிய மாற்றம் வந்துள்ளது என்றும் பெண்கள் அதிகம் பார்க்கும் போது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார். அந்த காலத்தில் நீதிமன்றங்களில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது தற்போது அது மாறியுள்ளது. இருப்பினும் இன்னும் வசதிகள் தேவை என்றார்.
புதிய சட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் சிறந்த சேவை செய்ய முடியும் என்று அறிவுறித்தினார்.
தற்போது இளைஞர்கள், வளர்ந்து வரும் வழக்கறிஞர்கள் பலமுறை கேள்விகளுக்கு பதில் அளிப்பது இல்லை என்ற அவர் உங்கள் மீது கிளைண்ட்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றார்.
கோவிட் VC Practice செய்ய ஆரம்பித்து விட்டோம் பெண்களுக்கு அது பெரிதும் உதவி உள்ளது என்றும் VC போன்ற தொழில்நுட்பம் பெண்கள் நமக்கு கிடைத்த வர பிரசாதம் உங்களது நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்றார். அலுவலகத்தில் உள்ள சீனியர் நமக்கு என்ன செய்வார் என்று நினைத்து வேலை செய்யாதீர்கள், நீங்கள் அனைவரும் மென்மேலும் உயர அனைவருக்கும் வாழ்த்துகள் தமிழ்நாடால் நான் சிறப்படைந்தேன் என்றார்.
பின்னர் அரசு சட்டக் கல்லூரியில் இரண்டு ஆண்டு முதல் நிலை படிப்பு முடித்த 20 பேர் மூன்று ஆண்டு பட்டப்படிப்பு படித்த 361 பேர் ஐந்து ஆண்டு பெற்ற படிப்பு முடித்த 301 பேர் என மொத்தம் 682 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் நிர்மல்குமார் இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 தினம் பட்டமளிப்பு விழா இங்கு நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா அவர்கள் இதில் கலந்து கொண்டது மிகப் பெருமையான ஒன்று என்றார்.
முதல்வரின் கரூர் பயணம் குறித்தான கேள்விக்கு கூடிய விரைவில் அதற்குரிய அறிவிப்புகள் வரும் அதுவரை பொறுத்திருங்கள் என்றார். ஆதிதிராவிடர் நலத்தூரில் சமூக நீதித்துறையாக பெயர் மாற்றியதற்கு திருமாவளவன் உட்பட பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு இது பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய கோரிக்கை அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை அந்த கோரிக்கையை ஏற்று இது மாற்றப்பட்டுள்ளது என்றார்.
ஆதவ் அர்ஜுனா பெயர் சேர்த்து சிபிஐ யிடம் திமுக புகார் அளித்திருப்பது குறித்தான கேள்விக்கு உச்சநீதிமன்றம் அவ்வளவு பெரிய வார்த்தையை சொன்ன பிறகும் இன்னும் திமுகவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை என்றும் முதல்வர் கரூருக்கு செல்வதில் இவர்களுக்கு என்ன பயம்? சிபிஐ யிடம் என்ன மனு கொடுக்க முடியும்? ஆதவ் அர்ஜுனா மீது என்னதான் விசாரிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
எதற்காக முதல்வர் கரூர் செல்லக்கூடாது என்று திமுகவினர் நினைக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர் சிபிஐ அவர்களது வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள் என்றும் திமுக சிபிஐ வைத்துக் கொண்டு என்னென்ன விளையாடினார்கள் முதல்வரை முடக்க பார்த்தார்கள் கட்சியை முடக்க பார்த்தார்கள் அனைத்திலும் தோற்றுப் போனார்கள்
எஃப் ஐ ஆர் கூட அந்த வழக்கறிஞர் குழு படிக்கவில்லை என்றார்.
அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் சிபிஐ வேண்டாம் என்று கூறிய நிலையில் தற்பொழுது எதற்காக சிபிஐ வேண்டும் என கூறுகிறார்கள் என்றார்.
கட்சியில் வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்றால் ஆர் எஸ் பாரதி அவராகவே சென்று புகார் அளிப்பார் அதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்றார்.மேலும் திமுக அதிமுக இரண்டும் சேர்ந்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது இருவரும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பார்த்தார்கள் அதுவும் தோல்வி அடைந்தது இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கட்சியில் ஆளே இல்லாத அளவிற்கு போய்விடும், 10, 15 ஆட்களைத் தவிர திமுக அதிமுகவில் ஆட்களை இல்லாமல் போய்விடுவார்கள் அந்த நிலைமையில் தான் தமிழக மக்கள் இவர்களை கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்கள் என விமர்சித்தார்
கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் விமர்சனம் பேசியது தொடர்பான கேள்வி, ஒரு சில விஷயங்களை என்ன கருத்தாக இருந்தாலும் நாங்கள் கேட்டுக் கொள்வோம் அதில் பெரிய பிரச்சினைகள் உள்ளது போன்று எனக்கு தெரியவில்லை, ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது மீண்டும் இரண்டாவது முறையாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுபவர்களுடன் வந்த உறவினர்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யாதது குறித்தான கேள்விக்கு அனைத்து ஏற்பாடுகளும் சரியாக தான் செய்யப்பட்டிருந்தது. அத்தனை பேரும் வரும்பொழுது அவர்களை சமாளிக்கும் இடவசதி இங்கு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு தான் இருந்தது என பதில் அளித்தார்.





