மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் விஸ்தாரா என்னும் பல அடுக்கு குடியிருப்புகள் மற்றும் தனித்தனி வீடுகள் என சுமார் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. மேலும் இதை கண்காணிப்பதற்காக சுமார் 20-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் போடப்பட்டிருந்தாலும் அதிகம் மீறி பின்பக்கமாக வந்து நேற்று இரவு வேல்முருகன் என்பவரின் வீட்டு வாசலில் வைத்திருந்த பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்கள்.

மொத்தம் இரண்டு பைக்குகள் திருடு போனதாக மதுரை கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை கும்பல் ஆனது முகமூடி அணிந்து பின்பக்கம் கதவை கட்டர் மூலமாக பூட்டை உடைத்து இரண்டு இரு சக்கர வாகனத்தை திருடி சென்று உள்ளார்கள். இதன் சிசிடிவி கட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





