• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா முளைப்பாரி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பதாக குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Jul 1, 2026

மதுரை சர்வதேச விமான நிலையம் அருகே பெருங்குடி அம்பேத்கர் நகரில் 60 ஆண்டுகால பழமையான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் 53 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த 23ஆம் தேதி காப்பு கட்டுதளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இன்று பால்குடம், அழகு குத்தும் நிகழ்வு நடைபெற்றது,நாளை முக்கிய விழாவாக முளைப்பாரி ஊர்வலம் சென்று முளைப்பாரியை ஆற்றில் கரைத்தல் நாளை மறுநாள் அன்னதானம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருவிழா கடந்த ஐந்து வருடங்களாக தனி நபர்களின் தூண்டுதலின் பெயரால் காவல்துறையினர் திருவிழா நடத்த அனுமதி அளிக்காததால் உயர் நீதிமன்ற மதுரை கிளை நாடி உத்தரவு பெற்று திருவிழா நடத்தி வருவதாகவும் இந்த ஆண்டுக்கான திருவிழாவும் பெருங்குடி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு காவல்துறையினர் அனுமதி மறுத்து அலை அலைக்கழித்ததாகவும் இதனால் அப்பகுதி பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடிய நிலையில் திருவிழா இரண்டு வாரம் தள்ளிப்போன நிலையில் தற்போது நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்து திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை முளைப்பாரி ஊர்வலம் மற்றும் நாளை மறுநாள் அன்னதானத்திற்கு அனுமதி இல்லை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என போலீசார் தெரிவிப்பதால் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கவில்லை என்றால் போராட்டத்தில் இறங்குவோம் எங்களை சாமியே கும்பிட விட மாட்டார்கள் எனவும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

மேலும் சுதந்திரமாக தெய்வ வழிபாடு நடத்தவும், முளைப்பாரி வளர்த்தால் ஆகம விதிப்படி கரைக்க வேண்டும் ஆனால் காவல்துறை அனுமதி தர மறுக்கிறார்கள். இந்துக்களான எங்களுக்கு இந்த தவெக அரசு மீது நம்பிக்கை இல்லாமல் உள்ளது. பாரபச்சமின்றி திருவிழா நடத்த காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.