• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

பழநி கோயிலில் 3 காவலர்கள் பணி நீக்கம்..,

ByS.Ariyanayagam

Jun 25, 2026

பழனி கோவில் பக்தர்கள் லஞ்சம் வாங்கிய, 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பழநி முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி, பக்தர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?வெளியூரில் இருந்து வந்த 3 பக்தர்கள், விரைவு தரிசனம் தொடர்பாக அங்கிருந்த தனியார் பாதுகாப்பு காவலர்களிடம் கேட்டுள்ளனர்.இதற்காக ₹3,000 லஞ்சம் பெற்ற 3 காவலர்கள், விதிகளை மீறி அவர்களை விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எடுக்கப்பட்ட நடவடிக்கை:
இந்த முறைகேடு குறித்து கோயில் இணை ஆணையர் மாரிமுத்து CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, லஞ்சம் பெற்ற 3 காவலர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.சம்பந்தப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ₹5 லட்சம் அபராதம் விதித்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.