• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

SDPI கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க தின விழா..,

ByS. SRIDHAR

Jun 21, 2026

புதுக்கோட்டை: SDPI கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க தின விழா இன்று புதுக்கோட்டை மேற்கு மாவட்ட அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
விழா நிகழ்வுகளை மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பொருளாளர் முகமது அலி அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் தவுலத் அலி அவர்கள் விழாவிற்கு தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் H. ஸலாஹுதீன் அவர்கள் கட்சிக் கொடியேற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். கொடியேற்றிய உடன் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிரப்பட்டது.

வர்த்தக அணி மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் அவர்களும், மகளிர் அணி மாவட்ட தலைவி ரிஸ்வானா பேகம் அவர்களும் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஷேக் முகமது அவர்கள் நன்றி உரையாற்றினார்

இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் முகமது கனி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், சகாபுதீன், சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் சிராஜுதீன், 35-வது வார்டு பொறுப்பாளர் சாகுல் ஹமீது, பாலன் நகர் வார்டு கமிட்டி செயலாளர் பைசல் அகமது, இணைச் செயலாளர் ராஜா முகமது, 7-வது வார்டு கிளைச் செயலாளர் இஸ்மாயில், போஸ் நகர் கிளை பொறுப்பாளர் அபூபக்கர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். _பங்கேற்ற பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது