• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குழந்தைகள் காப்பகத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா..,

மதுரை வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி வாடிப்பட்டி புஷ்பகம் குழந்தைகள் காப்பகத்தில் கேக் வெட்டி இனிப்பு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் நூர் முகமது தலைமை தாங்கி கேக் வெட்டி உணவு வழங்கினார்.முன்னாள் சேர்மன்திலகராஜ்,மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ் எஸ் குருசாமி வழக்கறிஞர் செல்வகுமார் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் , த.வெ.க பேரூர் செயலாளர் பசுமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரத் தலைவர் முருகானந்தம் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் பழனி, சுப்பாராயல் நகரத் தலைவர்கள் முத்துப்பாண்டி, சசிகுமார், அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோனை முத்து, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் முத்து, திரவியம், அழகு சின்னச்சாமி, ஜீவா, செல்வராஜ், டெய்,லர் ரவி த.வெ.க நந்தகோபால் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ்
நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை நகர தலைவர் முருகானந்தம் செய்திருந்தார்.