மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் அரசு உதவி பெறும் முத்து தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியான திருநகர் ஆர் வி பட்டி தனக்கன்குளம் போக்குவரத்துக் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் மாதிரி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும். இதில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வேட்பாளராக களம் இறங்குவார்கள்,

இந்த ஆண்டுக்கான மாதிரி பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் வேட்பாளராக ஏழு மாணவர்களும் துணை பிரதமர் வேட்பாளராக பத்து மாணவர்களும் போட்டியிட்டனர்.
மாணவர் மாதிரி பாராளுமன்றம் தேர்தலில் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாக்களித்து பிரதமர் துணை பிரதமர் மற்றும் கல்வி விளையாட்டுத்துறை போக்குவரத்து பாதுகாப்பு போன்ற துறைகளுக்காக மாணவர்கள் இலாகாரியாகதேர்வு செய்யப்படுவார்கள் . தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்கு சீட்டுகள்வழங்கப்பட்டு மாணவர்கள் தங்களின் வாக்குச்சீட்டுகளுடன் விரலில் மை வைத்து ஒரு நிஜ தேர்தல் அனுபவத்தை பெற்றனர்.

இதற்காக பள்ளியில் 5 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்தல் நடைபெற்றது .தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் பொறுப்பாசிரியர் தலைமையில் கூட்டத்தை கூட்டி அதில் மாணவர்கள் நலம் சார்ந்த விஷயங்களை கலந்து ஆலோசிப்பார்கள்.
எதிர்காலத்தில் மாணவர்கள் சமூக பொறுப்புடன் செயல்பட இந்த தேர்தல் வழி வகுப்பதாகவும் மாணவர்களின் தலைமை பண்பை ஊக்குவிப்பதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தலைமை ஆசிரியர் ஆனந்த் கூறினார்.

மேலும் இந்த தேர்தலில் மாணவர்களுக்காக பணி செய்ய விரும்பி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், துணை பிரதமர்களுக்கு அமைச்சர்களாக பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது அதன்படி விளையாட்டுத்துறை போக்குவரத்து துறை போன்ற இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு அவர்கள் அந்தத் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர் என்றார்.




