மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவி மலை அடிவாரத்தில் சிறுகனிம சலுகை விதிகள் சட்டம் 1959-ன்படி கருப்பாயூரணி,அருவி குளம் நீர் நிலைகள்,ஓடை,தார்ச்சாலை,வீடுகள் ,தொல்லியல் சின்னங்கள்,வழிபாட்டு கோயில்கள்,வீடுகள்,அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பால் நிற தேவாங்குகள் என சட்டம் வரையறுக்கின்ற நிலையில்,இத்தனை ஆவணங்களையும் மறைத்து கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கல்குவாரிக்கு வெடிகளை எல்லா நேரத்திலும் வெடிக்க வைப்பது,இரவும் பகலும் வேலை நடப்பது.

நீர் பற்றாக்குறை,நீர் மாசுபாடு,நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, விவசாயம் பாதிப்பு,வழிபாட்டு கோயில்கள்,தொல்லியல் சின்னங்கள் பாதிப்பு,1 பெண்மணிக்கு கருக்கலைப்பு என இந்த கல்குவாரியில் அதிகமான பாதிப்பை க.புதூர் ,வெளுத்துப்பட்டி,களப்பாறை,அய்வத்தான்பட்டி,முத்துகருப்பன்பட்டி மக்கள் அடைந்துள்ளார்கள்.

இதனால் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளார்கள். கடந்த திமுக ஆட்சியில் சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். இருந்தும் இந்த கல்குவாரியை மூடவில்லை மாறாக கல்குவாரி உரிமையாளர்கள் பொதுமக்களை மிரட்டச் செய்தார்கள்.
இந்த தவெக ஆட்சியில் 15.06.2026 அன்று கல்குவாரிக்கு அருகில் சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். காவல்துறை ஆய்வாளர்,காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மக்களிடம் சமாதானம் பேசினார்கள்.

அதற்கு பின்பு மேலூர் வட்டாட்சியர் பொது மக்களுடன் கல்குவாரியை பார்வையிட்டு தற்பொழுது கல்குவாரி இயங்காது ,வேலைகள் நடக்காது,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விதிமீறல்கள், முறைகேடுகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த பின்பு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.சொல்லிய மறுநாளே கல்குவாரி வேலைகளை தொடங்கிவிட்டார்கள் இதை கனிம வளத்துறை அமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பாரா? கவனத்தில் எடுப்பாரா?
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
இல்லை போராட்டத்தை கையில் எடுப்போம்!!




