• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் கொண்டு சென்ற வாகனம் நின்றதால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jun 17, 2026

மதுரை விமான நிலையத்திலிருந்து அஞ்சல் துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு தேர்வு வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் முன் பாதுகாப்புக்கு சென்ற தூத்துக்குடி காவல்துறை வாகனம் பழுதானதால் நடுரோட்டில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நீட் மறு தேர்வுக்கான வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட அஞ்சல் துறை வாகனத்திற்கு முன்னாள் சென்ற காவல்துறை பாதுகாப்பு வாகனம் பழுதானது.

இதனால் மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 600 மீட்டர் தொலைவிலேயே நீட் தேர்வு தேர்வுக்கான வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வு வினாத்தாள் உள்ள வாகனத்தை சுற்றிலும் காவல்துறையினர் மற்றும் சி ஐ எஸ் எப் வீரர்கள் சூழ்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரை மணி நேரமாக போலீஸ் பாதுகாப்பு வாகனம் பழுதானதால் விமான நிலைய சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது காவல்துறையினர் வாகனத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.