• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் வேல் வைத்து யாக வேள்வி..,

ByKalamegam Viswanathan

Jun 11, 2026

மதுரை மேலக்குயில்குடி மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா மலைக் கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி வேல் வைத்து யாக வேள்வி நடைப்பெற்றது‌. இதில் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இது குறித்து திருவண்ணாமலை ஆதீனம் கருணாநிதி சுவாமிகள் கூறும்போது. தமிழ்நாடு முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்கும் முன்னதாக அவர் திருச்செந்தூர் சென்று விஸ்வரூப தரிசனம் செய்து முருகனுக்கு வேல் வழங்கி ஞானம் பெற்று தரிசனம் செய்தார். அதனால் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற முதல்வர் ஸ்ரீ ஜோசப் விஜய் அனுமதிப்பார் என நம்புகிறோம்.

63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அவர்களின் ஜென்ம நட்சத்திரம் ஜூன் 20, 2026 அன்று திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் சைவ சித்தாந்த மாநாடு 2026. நடைபெறுகிறது.

உலகளாவிய ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக ஒற்றுமைக்குமான ஜூன் 21 உலக யோகா தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுவாமிமலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்ட பாரத பிரதமர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.