• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

காரைக்காலில் மகளிர் விழிப்புணர்வு பேரணி..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 8, 2026

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் காரைக்காலில் இன்று மகளிர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள், குழந்தைகள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு TNTJ மாநில துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே. அப்துர் ரஹீம் தலைமை தாங்கினார்.

பேரணியில் பங்கேற்றவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.

காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பேரணியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.