• Tue. Jul 28th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை ஆட்சியர் இஷிதா ராட்டி ஆய்வு..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 3, 2026

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 1ஆம் தேதி முதல் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற வரும் வீடு வீடாக சென்று அரசு அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். இதில் வீட்டின் வசதிகள் மற்றும் நிலைகள் குறித்து 33 கேள்விகள் கேட்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வீட்டு எண், வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டின் உரிமை நிலை, குடிநீர் ஆதாரம், கழிப்பறை வசதி, சமையலறை வசதி உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. சட்டப்படி கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.