• Fri. May 22nd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

ByS.Ariyanayagam

May 22, 2026

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெறும் மாணவர்களுக்கு 38-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE) மற்றும் கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் (B.Tech -CSBS) துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சி கல்லூரியின் தலைவர் கே. தனலட்சுமி அம்மாள், முதன்மை தலைவர் ஆர்.எஸ்.கே. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ரகுராம் தலைமையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் D. வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியரும், தலைவருமான டாக்டர் D. சாந்தி, கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறைப் பேராசிரியரும், தலைவருமான டாக்டர் S. பவளராஜன் ஆகியோரின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் கல்வித்துறைக் கூட்டமைப்பு (Academic Alliances) பிரிவின் தலைவர் டாக்டர் K. M. சுசீந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கி, மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னேற வழிகாட்டும் வகையில் சிறப்புரையாற்றினார்.இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE), கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் (B.Tech – CSBS) துறைகளைச் சார்ந்த 306 மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். மேலும் தேர்வு தரவரிசை பட்டியலில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E CSE), கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் (B.Tech – CSBS), துறைகளைச் சார்ந்த முதல் 3 இடங்களை பெற்ற இளநிலை மாணவர்களுக்குத் தங்கப்பதக்கம் கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.

வளாக வேலைவாய்ப்பின் மூலம் கல்லூரியின் பட்டதாரிகள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் TCS, Juspay, CTS, LTIMindtree, Cognizant Accenture, HCL, Hexaware உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் இறுதியில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.