• Sun. May 17th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

பி எஸ் என் ஏ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் பேச்சு..,

ByS.Ariyanayagam

May 16, 2026

திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி,
38வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பம்(IT), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல்(AI&DS) துறைகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவ மாணவிகள் தங்களது பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக சி-டாக், பெங்களூரு நிர்வாக இயக்குநர் எஸ். டி. சுதர்சன் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: கடின உழைப்பு வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும். திட்டமிடுதல் இருந்தால் தொழில் முனைவராக உலகம் முழுவதும் நீங்கள் பணியாற்றலாம். பொருளாதாரத்தில் நாட்டை முன்னேற்ற உங்கள் பங்கு மிக அவசியமானது. நீங்கள் உழைத்தால்,நீங்கள் வளர்வது மட்டுமல்லாமல், நாடும் வளரும் என்பதை உணர்ந்து நீங்கள் செயலாற்ற வேண்டும். தற்போது மார்க்கெட்டில் உள்ள பிரச்சனைகளை தெரிந்து அதற்கு தீர்வு காண வேண்டும். அப்டேட் என்பது மிக முக்கியமானது. அது தொழில் நுட்ப வாழ்க்கையில் மிக அவசியமானது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கல்லூரியின் தலைவர் கே. தனலட்சுமி, இணைத் தலைவர் ஆர். எஸ். கே. ரகுராம் மற்றும் டிரஸ்டி சூர்யா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் . டி. வாசுதேவன் வாழ்த்துரையாற்றினார். வளாக வேலைவாய்ப்பின் மூலம் கல்லூரியின் பட்டதாரிகள் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இதில் மாணவ மாணவிகள் CTS, TCS, Hexaware, Lavendel, HCL, L&T உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.