மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழி சாலை கப்பலூர் சிக்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தனியார் டயர் நிறுவனத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது இரண்டு தலை கொண்ட மண்ணுளிப் பாம்பு ஊர்ந்து கொண்டு இருந்ததை கண்ட ஊழியர்கள் உடனடியாக அங்குள்ள மேலாளிடம் தகவல் தெரிவிக்கவே வினோத் என்னும் ஊழியர் அதை பத்திரமாக பிடித்து சமூக ஆர்வலர் காளமேகம் தகவல் தெரிவிக்கவே அவர் மதுரை மாவட்ட வனசரகர் வினிஷ் அவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர் உத்தரவின் பெயரில் வன பாதுகாவல வாகன ஓட்டுனர் செந்தில் பசுமலை அருகே உள்ள வந்து இரண்டு தலை கொண்ட மண்ணுளிப் பாம்பு பெற்று சென்றார்.
பின் அவரிடம் இதை என்ன செய்வார்கள் என்று கேட்டபோது அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிடு எனவும் தெரிவித்தார் தயவுசெய்து பாம்பை கண்டால் யாரும் அடிக்காதீர்கள் பாம்பு மட்டுமல்லாது எந்த ஒரு விலங்கினமாக இருந்தாலும் இருந்தாலும் தயவு செய்து அடிக்காதீர்கள் பாம்பு வெயிலின் தாக்கம் காரணமாக வெளியில் அதிக அளவு வரும் அதனால் உடனடியாக நீங்கள் பாம்பை அடிக்காதீர்கள் முடிந்த அளவு தண்ணீரை ஊற்றினால் அது குளிர்ச்சி பட்டவுடன் அது மறைந்து சென்று விடும் முடிந்த அளவு பாம்பை அடிக்காமல் பாம்பு பிடி வீரர்களிடம் தகவல் தெரிவித்தால் உடனடியாக வந்து பாம்பை பத்திரமாக மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்கு விட்டு விடுவார்கள். குறிப்பாக இதுபோன்ற அரிதான பாம்புகளை தயவு செய்து அடித்து கொடுக்காதீர்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் இதைப் பற்றி மண்ணுளிப் பாம்பு (Red Sand Boa). இதைப் பற்றி மக்களிடையே பல்வேறு மருத்துவக் கதைகள் உலவினாலும், உண்மையான மருத்துவ அறிவியலில் அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.மண்ணுளிப் பாம்பைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய உண்மைகள்:
மருத்துவ குணம் இல்லை: இந்தப் பாம்பைச் சாப்பிடுவதால் அல்லது இதிலிருந்து எடுக்கப்படும் பொருட்களால் எய்ட்ஸ், புற்றுநோய் அல்லது ஆண்மைக்குறைவு போன்ற நோய்கள் குணமாகும் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை. இதில் எந்தவிதமான மருத்துவ குணமும் கிடையாது. விஷமற்றது: இது மிகவும் சாதுவான வகை பாம்பு. இதற்கு விஷம் கிடையாது, மனிதர்களைத் தாக்காது.
இரட்டை தலை கிடையாது: இதன் வால் பகுதி தடிமனாகத் தலை போன்றே இருப்பதால், இது ‘இரண்டு தலைப் பாம்பு’ என்று தவறாக அழைக்கப்படுகிறது. உண்மையில் இதற்கு ஒரு தலைதான் உண்டு. சட்டவிரோதம்: இந்தியாவில் மண்ணுளிப் பாம்புகளைப் பிடிப்பதோ, வைத்திருப்பதோ அல்லது விற்பனை செய்வதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி (Wildlife Protection Act) கடுமையான குற்றம். இதற்காகப் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
செய்ய வேண்டியவை:
இதைப் பெட்டியில் அடைத்து வைப்பது சட்டப்படி சிக்கலை உருவாக்கும். எனவே, உடனடியாக உங்கள் பகுதியில் உள்ள வனத்துறையினருக்கோ (Forest Department) அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாம்பு மீட்பு தன்னார்வலர்களுக்கோ (Snake Rescuers) தகவல் கொடுத்து இதை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடச் செய்யுங்கள்.
இயற்கைச் சமநிலையைப் பாதுகாப்பதில் இந்த உயிரினங்களுக்கு முக்கிய பங்கு உண்டு, எனவே அவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.




