• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்திற்கு அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்..,

ByKalamegam Viswanathan

Apr 20, 2026

மதுரை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு வீரர்கள் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

கடந்த சனிக்கிழமை இரவு மின்னஞ்சல் மூலம் மதுரை விமான நிலைய அலுவலகத்திற்கு விடுகின்ற மிரட்டல் விடப்பட்டது . ஞாயிறு விடுமுறை என்பதால் விமான நிலைய அலுவலர்கள் இன்று காலை பணிக்கு வந்த பின் மின்னஞ்சலை சோதனை செய்த போது வெடிகுண்டு மிரட்டல் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து விமான விமான நிலையத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு வருகிறது .

இந்த மாதத்திலேயே இது இரண்டாவது முறை வெடிகுண்டு மிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மர்ம நபர் விமான நிலைய பயண முனைய மேலாளருக்கு (Terminal manager,) மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.