• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டி..,

சோழவந்தான்தொகுதியில் திமுக வேட்பாளராக வெங்கடேசன் எம்.எல்.ஏ., போட்டி
இரண்டாவது முறை களம் காண்கிறார்.

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதனால் திமுக அதிமுக தேமுதிக காங்கிரஸ் பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள் இந்நிலையில் தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள வெங்கடேசன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காதக்கிணற்றில் வசித்து வரும்
அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணி செய்து ஓய்வு பெற்ற ஆறுமுகம் விஜயலட்சுமி இவர்களின் மகன் வெங்கடேசன் 07.04.1975ல் பிறந்தவர். பி.ஏ.,(பொது நிர்வாகம்)பட்டம் பெற்றுள்ளார். 1995முதல் தி.மு.க. உறுப்பினராக சேர்ந்து கிளைகழக பிரதிநிதி, கிளைகழக செயலாளர், ஊரட்சிசெயலாளர், மாவட்ட ஆதிதிராவிட நலப்பிரிவு அமைப்பாளர், 2014 முதல் மதுரை வடக்குமாவட்டதுணைசெயலாளராகவும் தற்போது 2021முதல் சோழவந்தான் சட்டமன்றஉறுப்பினராகவும் உள்ளார்.