• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையம்..,

BySeenu

Mar 17, 2026

“இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலை வாய்ப்பை உருவாக்க இலவச தொழிற்கல்வி மையம் துவங்கபட்டது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழிற்கல்வி வழங்கி வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் எஸ்.கே.பி சுனந்தா ராம்மோகன் திறன் மையம் உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையம் 18 முதல் 27 வயதிற்குட்பட்ட, பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவான இளைஞர்களுக்கு இலவச தொழிற்கல்வி வழங்குகிறது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் வேலை பெறும் வகையில் EXIM Executive, Supply Chain Associate மற்றும் Warehouse Associate போன்ற பயிற்சிகள் 45 முதல் 90 நாட்கள் வரை வழங்கப்படுகின்றன.

கரூரைச் சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் டாக்டர் ராம்மோகனின் மகாலட்சுமி-முத்துராமலிங்கம் அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ராஜேந்திர பிரசாத் பரிந்துரையின் பேரில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்விக் கழகத் தலைவர் டாக்டர். மோகன் பிரசாத் மற்றும் அதன் உறுப்பினர்கள், அறங்காவலர்களின் ஆதரவுடனும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.