• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள் கூட்டம்..,

BySeenu

Mar 17, 2026

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகளும் காட்டுப்பன்றிகளும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.

அண்மை காலமாக இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரியும் காட்டுப் பன்றிகள் வாழை மரம், விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகளும் வனத் துறையினரிடம் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரப்பாளையம் ஊருக்குள் இரவு நேரம் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழை மரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்தி சென்றுள்ளன. தற்போது அந்த காட்டுப்பன்றிகள் சுற்றி திரிந்து வாழை மரங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

காட்டுப் பன்றிகளால் நாள்தோறும் பெரும் சிரமங்களை சந்தித்து வரும் விவசாயிகள் வனத்துறையினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு உள்ளனர்.