• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் உயிரிழப்பு..

Byகுமார்

Dec 22, 2021

மதுரையில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு.

மதுரை விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கீழவெளி பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே உயிரிழப்பு.

அவருடன் பணியில் இருந்த மற்றொரு காவலரான கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.இரவு நேரம் நடந்த சம்பவம் என்பதால் பொதுமக்கள் யாரும் அதிக அளவில் இல்லை எனவே மதுரையில் பல்வேறு இடங்களில் இது போன்ற பழைய கட்டடங்கள் உள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கண்காணித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.